சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையால் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி கடையால் காவல்துறையினர் கிலாத்தூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 1/2 கிலோ கஞ்சா இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த முகமது அப்சர் என்பது தெரியவந்தது.