Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் பரபரப்பு…. பெண் தற்கொலை”வெளியான பல உண்மைகள்” பேரதிர்ச்சியில் பெற்றோர்….!!

பெண்ணை கர்ப்பமாக்கி தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவநாதபுரம் பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஆர்த்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆர்த்தி கடந்த 5-ஆம்  தேதி வீட்டில் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்த்தியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆர்த்திக்கும்  கருப்பூர் பகுதியை சேர்ந்த சாவித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில்  சாவித் திருமணம் செய்து கொள்வதாக  ஆசை வார்த்தை கூறி ஆர்த்தியை  கர்ப்பமாகியுள்ளார்.

இதனையடுத்து  3 மாத கர்ப்பமாக இருந்த ஆர்த்தி சாவித்திடம்  தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ள்ளார்.  ஆனால் சாவித் திருமணம் செய்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஆர்த்தியை  தற்கொலைக்கு தூண்டிய சாவித்தை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |