பாகிஸ்தானில் பயங்கரவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க புதியதாக ஏராளமானவர்கள் பயிற்சி முகாம்கள் கட்டப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை இந்திய உளவு அமைப்புகள் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதிகளில் புதிதாக ஏராளமான முகாம்களை ஏராளமான நவீன வசதிகளுடன் பாகிஸ்தான் கட்டி இருப்பதையும்,
ஒவ்வொரு முகாம்களிலும் 700 பேர் வரை பயிற்சி பெற முடியும் என்பதையும் இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்தனர். முகாம்களில் 92 சதவீதம் பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதையும் அதிலும் 12% பேர் சிறுவர்கள் என்பதையும் உளவு அமைப்புகள் கண்டறிந்துள்ளனர்.