சட்ட விரோதமாக காட்டுக்குள் வேட்டைக்கு சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்திலுள்ள வயநாடு பகுதியில் இருக்கும் வனப்பகுதிக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிலர் வேட்டைக்காக சென்றனர். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக கேரள வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் வேட்டைக்கு சென்றது தெரியவந்தது.
இதில் ஒருவர் எருமாடு காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜூ, சுரேந்திரன், சுரேஷ், மேபிள் ஆபிரகாம், சிஜோ, சிபி, காவலர் சிஜூ, சோமன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் வனவிலங்கு வேட்டைக்காக பயன்படுத்திய துப்பாக்கியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.