ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை பயன்படுத்துங்கள் என அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். நாட்டின் ஆட்சி மொழியை அலுவல் மொழி என பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
"ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. (1/2)#StopHindiImposition
— M.K.Stalin (@mkstalin) April 8, 2022
இதைத்தொடர்ந்து அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் டிவிட்டர் டிரெண்டிங்கில் #stopHindilmposition என்பதே டாப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.
‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் @AmitShah நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.