பீஸ்ட் திரைப்படத்தை விஜய் மாறுவேடத்தில் வந்து பார்ப்பார் என கூறப்படுகின்றது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் ஆரம்பக் கட்டத்தில் சினிமாவிற்கு வந்த போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி அதையும் தாண்டி தன் விடாமுயற்சியின் மூலம் வெற்றிகண்டவர். இந்நிலையில் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில் விஜய் தனது படம் ரிலீஸ் ஆகும் பொழுது முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் பார்ப்பாரென்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான காசி திரையரங்கில் விஜயின் இதற்கு முன்பாக பல முறை மாறுவேடத்தில் வந்து படம் பார்த்துள்ளார். ஆனால் விஜய் ரசிகர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்திற்கும் விஜய் வருவார் என எதிர்பார்க்கின்றார்கள் குறிப்பிடத்தக்கது.