தங்கம் கிடைப்பதாக எண்ணி பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், சூரத்தில் ஏராளமான சிறிய தங்க நகைகள் செய்யும் பட்டறைகள் உள்ளது. இங்கிருந்து கழிவான தங்கள் சாக்கடையில் கலந்து விடுவது வழக்கம். இந்நிலையில் இந்த சாக்கடைக்குள் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் இறங்கிய இருவர் மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர். 10 அடி ஆழம் வரை இறங்கி தங்கங்களைத் தேடிக் கொண்டிருந்த இருவர் மூச்சு திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.