பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், பொது தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவது சாத்தியம் இல்லை என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியான செய்தி குறிப்பில், “நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதத்திற்கு முன் பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை” என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவான தேர்தலை சுதந்திரமான முறையில் நடத்துவதற்கு இன்னும் 7 மாதங்கள் தேவைப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.