Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உடனடியாக அகற்ற வேண்டும்…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

டாஸ்மார்க் கடை திறந்ததை   கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல ராஜா விதி டவுன் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  பகுதியில் நேற்று  மறுபடியும் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது. இந்த கடையால்  பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள்  அதிகாரிகளிடம் பலமுறை  மனு அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |