இம்மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது. அந்த வகையில் இம்மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி (ஏப்ரல்) இம்மாதத்தில் பல இந்திய பண்டிகைகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் காரணமாக, அடுத்த வாரத்தில் நாட்டில் உள்ள பல வங்கிகள் மூடப்படும் எனவும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறிய சிரமத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் முக்கியமான வங்கிப் பணிகளை இந்த வாரத்திலேயே முடிக்கும்படி, அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15 விடுமுறைகளும் மற்றும் அடுத்த வாரம் மட்டும் 6 விடுமுறைகளும் வர உள்ளது. ஆனால் சில விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்நிலையில் உங்கள் மாநிலத்தின் வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே சோதித்து உங்களின் வங்கி பணிகளை முன்னதாக திட்டமிட்டுக் கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி,விடுமுறை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 9 – 2-வது சனிக்கிழமை – இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
- ஏப்ரல் 10 – ஞாயிறு
- ஏப்ரல் 14 – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/மஹாவீர் ஜெயந்தி/பைசாகி/வைசாகி/தமிழ் புத்தாண்டு தினம்/செய்ராபா/பிஜு விழா/போஹாக் பிஹு. ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர பெரும்பாலான இடங்களில் வங்கிகள் மூடப்படும்.
- ஏப்ரல் 15 – புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு தினம் (நபபர்ஷா) / ஹிமாச்சல் நாள் / விஷு / போஹாக் பிஹு. ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர பெரும்பாலான இடங்களில் வங்கிகள் மூடப்படும் என அறிவித்துள்ளது.
- ஏப்ரல் 16 – அசாமில் போஹாக் பிஹு
- ஏப்ரல் 17 – ஞாயிறு
- ஏப்ரல் 21 – காடியா பூஜை
- ஏப்ரல் 23 – 4-வது சனிக்கிழமை – இந்நாளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும் எனவும் ,
- ஏப்ரல் 24 – ஞாயிறு
- இதையடுத்து ஏப்ரல் 29 – ஷப்-இ-கத்ர், ஜுமாத்-உல்-விடா. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள வங்கிகள் மட்டும் இந்த நாளில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.