Categories
தேசிய செய்திகள்

“ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு”….. தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கியில் நிர்வாக குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், புது வழியில்  தெரிவிக்கும்  முயற்சி தொடங்கியிருக்கிறது. ஆரம்பிய செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நிர்வாகக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும,  முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாக ரிசர்வ்  வங்கி தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி ஆரம்பமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சண்டிகரில் நடைபெற்ற இயக்குனர்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்ட ரிசர்வ்  வங்கியின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும், வகையில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுபோன்ற தகவல்களை கேட்க வேண்டிய அவசியம் ஏற்படாத நிலையை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

Categories

Tech |