ஏற்கனவே பணியில் இருந்த மக்கள் நலப் பணியாளர்கள் குடும்ப வாரிசுகளுக்கும் அவர்கள் விரும்பினால் இந்த பணி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 1989-ஆம் ஆண்டு 25,354 மக்கள் நலப்பணியாளர்கள் கிராம அளவில் பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1991-ல் அதிமுக ஆட்சியில் 25,234 மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், 1997ம் ஆண்டு மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு 2001 ஜூன் மாதம் மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் வேலையை விட்டு நீக்கியதாக, அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, மக்கள் நலப் பணியாளர்களை வேலை நிறுத்தம் செய்துள்ளார். இவ்வாறு திமுக ஆட்சிக்கு வந்தால் வேலைக்கு சேர்ப்பது மற்றும் அதிமுக வந்தால் வேலை நிறுத்தம் செய்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. இதையடுத்து 2014 ஆகஸ்ட் மாதம் அன்று மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு மேல்முறையீடு செய்தது. இதனால் ஊராட்சிகளில் 100 நாள் வேலை என்ற உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியானது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் நல பணியாளர்களுக்கு ஊதியமானது ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ.2500 கூடுதலாக வழங்கப்படுவதாக கூறியுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே பணியில் இருந்த மக்கள் நலப் பணியாளர்கள் குடும்ப வாரிசுகளுக்கும் அவர்கள் விரும்பினால் இந்த பணி வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.