தமிழக சட்டப்பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கை மீது விவாதமும், வாக்கெடுப்பும், இந்த துறை மானிய கோரிக்கையில் பத்து, பதினைந்து முறை வேண்டுமானால் நான் இந்தத் துறைக்கு பதிலளித்து இருப்பேன் என்றாலும், நான் முதல் முறையாக பதில் அளிப்பதை போலதான் உணர்கிறேன்.
சபையில் உரையாற்றும்போது அச்ச உணர்வு இருக்க வேண்டுமே தவிர, அலட்சிய உணர்வு இருக்க கூடாது என்பதை என்னுடைய தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பயம், அச்சம் மட்டுமல்ல ஒரு வித மன மகிழ்ச்சி நெகிழ்ச்சியாலும் ஆட்பட்டு இருக்கிறேன். சென்ற ஆண்டு என் பதிலுரைக்காக நான் எழுந்து நின்று தலைவர் அவர்களே என்று விழித்தபோது….
என் தலைவர் எழுந்து நின்று என்னை பற்றி ஆற்றிய புகழ் உரை என் நெஞ்சில் இன்றும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அதை போல் தாங்களும் இந்த மாமன்றத்தில் இருக்கின்ற மதிப்புமிக்க தலைவர்களும் என்மீது கொட்டிய பாச மழையின் ஈரம் இன்னும் காயமல் தான் இருக்கிறது என நெகிழ்ச்சி கொண்டார்.