பெரியார் வழியில் அடித்தட்டு மக்களுக்காக அதிமுக தொடர்ந்து பயணிக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த முகாமை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பொங்கல் விடுமுறையால் நீட் பயிற்சி மையங்கள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.