சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதிமங்கலம் கோம்பூர் கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரன்ராஜ் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சரண்ராஜை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் சரண்ராஜிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.