Categories
மாநில செய்திகள்

நகை கடன் தள்ளுபடி க்கு மாற்றுதிறனாளியிடம் ரூ.2,000 லஞ்சம்…. அரசு அதிகாரிகள் அடாவடி…!!!!!

மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னிடம் லஞ்சம் பெற்ற ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு வலியுறுத்தியிருக்கிறார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சாமி செட்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஏலகிரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற மாற்றுத்திறனாளி ஒருவர்  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்ப செலவுகளுக்காக முக்கால் பவுன் தங்க நகையை 9 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக 9 வருடமாக மீட்க முடியாமல் வட்டி மட்டும் கட்டி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள நகை கடன் தள்ளுபடி இந்த அறிவிப்பில் ஆறுமுகத்தின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கடன் தள்ளுபடிக்கான  சான்று கேட்டு சாமி  செட்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகிய  ஆறுமுகத்திடம் மாற்றுத்திறனாளி என கூட பார்க்காமல் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டு இருக்கின்றனர். அந்த பணத்தை கொடுத்த பிறகுதான் முக்கால் பவுன் நகையைத் திருப்பிக் கொடுத்து உள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஆறுமுகம் வறுமை காரணமாக ஆடு மாடு மேய்த்துக் கொண்டு ஒன்பது வருடங்களாக நகையை மீட்க முடியாமல் தவித்த  தன்னிடம் மாற்றுத்திறனாளி  என்று கூட பார்க்காமல் லஞ்சம் பெற்ற ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறார்.

Categories

Tech |