Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்படுகிறது?….. ஆய்வு செய்த ஆட்சியரின் நேரடி உதவியாளர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பள்ளிகளில்  ஆய்வு செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேவிகா ராணி லெக்கணாப்பட்டி உயர்நிலைப்பள்ளி, பாதிப்பட்டியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி, இலுப்பக்குடிப்பட்டியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு, அவற்றின் தரம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

இதில் ஊராட்சி ஒன்றிய வட்டார அலுவலர் முருகானந்தம், சத்துணவு அமைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் தேவிகா ராணி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு, அவற்றின் தரம் மற்றும் தோட்ட காய்கறிகள், புதிதாக  கட்டப்படும் கட்டிடம் ஆகியவற்றை  ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |