Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இன்று காலை 10 மணிக்கு ரெடியா இருங்க?…. மாநகராட்சி பட்ஜெட் வெளியீடு….!!!!

சென்னையில் 6 ஆண்டுகள் கழித்து மாநகராட்சி பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மேயர் பிரியா வெளியிடுகிறார். இதற்கான மன்றக் கூட்டம் 10 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் தலைமையிலும், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையிலும் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்ய உள்ளார்.

சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பிற்கு வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐம்பது பக்கங்கள் கொண்டதாக மாநகராட்சி பட்ஜெட் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் சென்னை மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் சென்னை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |