Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா….. நூற்றுக்கணக்கான ஆடுகள் காணிக்கை….. தென்னூரில் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்……!!

தென்னூர் உக்கிரமாகாளி அம்மன் கோவிலில் தேர் திருவிழா பெரும் விமர்சையாக நடைபெற்று வந்துள்ளது.

திருச்சி மாவட்டதிலுள்ள தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவிலில் வருடம் தோறும் தேர்திருவிழா பெரு விமர்சையாக நடைபெரும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 5ஆம் தேதி காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பகலில் சுத்த பூஜை நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட அம்மனை தேரில் வைத்து ஊர்வலமும் நடைபெற்றுள்ளது.

இதைதொடர்ந்து அம்மனின் தேரானது தென்னூர் காவல்காரன் தெரு, அண்ணாநகர், லட்சுமி நகர் மல்லிகைபுரம் ஆகிய தெருக்களில் ஊர்வலமாக சென்றது.மேலும் விழாவின் முக்கிய நாளான நேற்று உக்கிர காளியம்மன் கோவிலின் காவல் தெய்வமான சந்தன கருப்பு குட்டி குடித்தல் விழா தென்னூரிலுள்ள பிடாரி மந்தையின் தேரின் முன்பு நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் ஆட்டுக்குட்டிகளின் குரல்வளையை கடித்து இரத்தத்தை உறிஞ்சி குடித்து அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. திருவிழாவில் 100க்கும் அதிகமான ஆடுகளை பொதுமக்கள் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இந்த திருவிழாவை கான ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் தென்னூர் முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.மேலும்  தென்னூரில் பல்வேறு இடங்களில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

Categories

Tech |