Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வாரம் தோறும் இனி இது கிடையாது…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில்இந்த வாரம் முதல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிட்டும் போது தமிழ்நாட்டில் கொரோனா  விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தியது தான். மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 91 சதவீதம் முதல் தவணைத் தடுப்பூசியும், 73 சதவீதத்தினர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு பொது மக்களின் வரவேற்பு குறைந்துள்ளதால் இந்த வாரம்  முதல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதேநேரம் நாள்தோறும் மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா  தடுப்பு ஊசி செலுத்தப்படும் எனவும் கூறப் பட்டிருக்கிறது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வவிநாயகம் பேசிய போது, தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற தடுப்பூசி முகாம்கள் இனிவரும் நாட்களில் தேவைக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் தனியாக நடத்தப்படும். அதனால் தடுப்பூசி முகாம்கள் எங்கு தேவை என்பதை அந்த மாவட்ட சுகாதார இயக்ககம் கண்டறிந்து அதற்கான பணிகளை மேற்கொள்வார்கள்.

இதனை  தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கப்படும். மேலும் போதிய அளவில் தடுப்பூசி  இருப்பு தமிழகத்தில் இருக்கிறது. கொரோனா  புதிய உரு மாற்றத்தை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்  கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 1.37 கோடி பேர் இன்னும் இரண்டாவது தவணை செலுத்தாமல் இருப்பதாக கூறபட்டுள்ளது.

Categories

Tech |