Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. மகளின் திருமணத்தால் “தந்தை தற்கொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!

விவசாயி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணம்பேட்டை பகுதியில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளின் திருமணத்திற்கு தேவையான பணத்தை பலரிடம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜனுக்கு  போதுமான பணம் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தராஜன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கோவிந்தராஜனை  அருகில்  இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |