Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போன் போட்டு அழைத்து… கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்ய முயற்சி… 4 பேரை தூக்கிய போலீஸ்..!!

கல்லூரி மாணவரை தாக்கி கொலை செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் கிழக்கு மாட வீதியில் வசித்து வருபவர் ஜனார்த்தனன். இவருடைய மகன் 20 வயதுடைய பாபு. இவர் செய்யாறு பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டராகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 42 வயதுடைய முகம்மது பைசல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாபுவை பெட்சீட் வியாபாரம் பார்க்க முகமது பைசல் அழைத்துள்ளார். பாபு கொரோனா தடைகள் நீங்கியதால் கல்லூரியில் படிப்பதற்காக செய்யாறுக்கு வந்துவிட்டார். அதன்பின் கடந்த 5-ம் தேதி முகமது பைசல் பெட்சீட் கொண்டு வந்து இருக்கிறேன் வந்து வாங்கிச் செல் என்று பாபுவை போன் மூலம் கூப்பிட்டார். அதன்பின் பாபு செய்யாறு கோனேரிராயன் குளக்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு முகமது பைசல் மற்றும் அவருடன் வந்த மூன்று பேர் சேர்ந்து பாபுவை சரமாரியாக தாக்கி கத்தியால் கொலை செய்ய முயன்றுள்ளனர். அதன் பின் அவர்கள் தப்பித்து சென்று விட்டனர்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாபுவை அவரது அண்ணன் சதீஷ் மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அதன் பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இதுகுறித்து செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து முகம்மது பைசல், பெரம்பூரை சேர்ந்த 20 வயதுடைய பாலகிருஷ்ணன், 30 வயதுடைய பிரபு, திருவள்ளூர் கொளத்தூரை சேர்ந்த 47 வயதுடைய ஜேசுராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |