பிரான்சில் நாளை ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அண்மையில் வெளியாகியுள்ள கருத்து கணிப்பு ஒன்றின் முடிவுகள் அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இமானுவேல் மேக்ரான் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டுவதை விட உக்ரைன் விவகாரத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் அவருடைய போட்டியாளரான Marine Le Pen என்ற பெண்மணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 6ஆம் தேதி அன்று வெளியான கருத்துக் கணிப்பு ஒன்றில் முடிவுகள் ஜனாதிபதி தேர்தலில் இமானுவேல் மேக்ரானுக்கு 49.5 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், Marine Le Pen என்ற பெண்மணி 50.5 சதவிகித வாக்குகள் பெறுவார் என்றும் தெரிவித்துள்ளன. இதனால் மேக்ரானை தோற்கடித்து சிறிய வித்தியாசத்தில் Marine Le Pen ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது என்று அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் கூறுகின்றன. அதோடு மட்டுமில்லாமல் Marine Le Pen தனது தேர்தல் வாக்குறுதிகளில் விலைவாசி குறித்த பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதால் அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.