ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே தெற்கு மலை ஓடை அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அகற்றப்பட்டது. அப்பகுதியில் இருந்த ஒரு மாற்றுத்திறனாளியின் வீடு மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. அதாவது பொதுமக்கள் இந்த மாற்றுத்திறனாளிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு வீட்டை இடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் ஓடை அருகே இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பொதுபணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் வின்ஸ் ஆன்றோ, வருவாய் ஆய்வாளர் சதீஷ் உள்பட பல அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர்.
அப்போது கவுன்சிலர் மணி தலைமையிலான ஒரு குழுவினர் அப்பகுதியில் இருக்கும் வீடுகளை இடிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது ஏற்கனவே அகற்றப்பட்ட வீடுகளுக்கு இதுவரை எந்த ஒரு மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. எனவே மீண்டும் வீடுகளை அமைப்பதற்கு நாங்கள் விடமாட்டோம் என கூறியுள்ளனர். இதையறிந்த தோவாளை தாசில்தார் தாஜ் நிஷா, நில அளவையர் சங்கரம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து மீண்டும் ஆக்கிரமிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.