லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், செதுவாலை இந்திரா நகரில் வசித்து வந்தவர் 52 வயதுடைய அண்ணாமலை. இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், நான்கு மகன்களும் உள்ளார்கள். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி மது அருந்துவதற்காக குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் தர மறுத்ததால் மனவேதனை அடைந்த அண்ணாமலை வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் உடல் கருகிய நிலையில் படுகாயமடைந்த அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரழந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.