Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகாம…. “குடிச்சிட்டு ஊர் சுற்றிய மகன்”…. மனமுடைந்து தாய் எடுத்த சோக முடிவு..!!

மது அருந்திவிட்டு மகன் ஊர் சுற்றியதால் மனவேதனை அடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் உள்ள லெட்சுமணன்பட்டியில் வசித்து வருபவர் விவசாயி பாலுகண்ணு. இவருடைய மனைவி 47 வயதுடைய அமுதா. இந்த தம்பதியரின் மகன் 25 வயதுடைய தினேஷ்குமார். இந்தநிலையில் தினேஷ்குமார் சரிவர வேலைக்கு போகாமல் மது அருந்தி கொண்டு ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த தாய் அமுதா கடந்த 5ம் தேதி மருந்து குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா கடந்த 6-ம் தேதி இரவு பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |