புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகே உள்ள காவேரி நகர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் 55 வயதுடைய ஜெய்சங்கர். இவர் சிப்கார்ட் துணை மின் நிலையத்தில் ஆக்க முகவராக பணியாற்றி வந்தார். சென்ற 6ஆம் தேதி மின் நிலையத்தில் தாழ்வழுத்த மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்ததால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் கவனக்குறைவாக செயல்பட்ட உதவி மின் செயற்பொறியாளர்கள் ரகுநாதன் மற்றும் ஜெகநாதன் உள்ளிட்ட இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் சேகர் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் சக ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.