ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த நாள் தொடங்கி தற்போது வரை லட்சக்கணக்கான உக்ரேனிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொத்துக்கொத்தாக ரஷ்ய வீரர்களால் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் புச்சா நகரம் அதிகமான எண்ணிக்கையில் மரணங்களை சந்தித்து சுடுகாடு போல் காட்சியளிக்கிறது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் போரால் படுகாயமடைந்து சுவாசிக்க சிரமப்படும் ரஷ்ய வீரர் ஒருவரை உக்ரைன் ராணுவ வீரர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அப்போதும் அவருடைய உடலில் அசைவுகள் தென்பட்டதால் மூன்றாவது முறையாக அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அருகில் ஒரு ரஷ்ய போர் வாகனமும் இரண்டு ரஷ்ய வீரர்களின் உடல்களும் கிடைத்துள்ளன. அதில் ஒரு வீரர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உக்ரைனின் புச்சா நகர் அருகே உள்ள டிமிட்ரிவ்கா என்னும் இடத்தில் அரங்கேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.