ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் ,சூரம்பட்டிவலசுவில் உள்ள ஈரோடு மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
மேலும் கோவை மாவட்ட தலைவர் காளியப்பன், ஈரோடு மாவட்ட தலைவர் மாடசாமி, திருச்சி மாவட்ட தலைவர் தங்கபூமி, நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், ரேஷன் கடை பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ரேஷன் கடையில் பணியாற்றுவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்தனர். கொரோனா காலத்தில் அதை நிறுத்தினர். எனவே அதனை மீண்டும் வழங்க கோரி இந்த போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினார்கள்.