நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழைகளுக்கும் உறுதியான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றது. மக்களின் பங்களிப்பால் மட்டுமே இந்த வீடுகளை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளும் நவீன வசதிகளை கொண்டதாகவும், மகளிருக்கு அதிகாரமளிக்கும் அடையாளமாகவும் திகழ்கிறது. மேலும் நாட்டின் ஒரு பகுதியான வலிமையான வீடு வழங்கிய அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என கூறியுள்ளார்.