கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை ஏப்ரல் 22-ஆம் தேதி வரை ஜூன் 24-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை தாம்பரத்தில் இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:00 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.
இதனையடுத்து மாலை 4:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இதன்பிறகு திருநெல்வேலியிலிருந்து சென்னை தாம்பரத்திற்கு ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். அதன்பிறகு தாம்பரத்தில் இருந்து இரவு 10:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 10:25 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்லும்.