Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் விழுப்புரம்

மாதத்தில் மூன்று நாள் தான்…. எப்போ திறக்கும்ன்னு தெரியல…. ரேஷன் கடையால் அவதிப்படும் மக்கள்….!!

 மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்படும் நியாய விலை கடையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகிலுள்ள வடநெற்குணம் கிராமத்தில் நியாய விலைக்கடை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடை மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு வருகின்றது.

அதுவும் அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு எந்த தேதியில் ரேஷன் கடை திறக்கப்பட்டு சாமான் வழங்கப்படுகிறது என்ற தகவல் தெரியவில்லை. இதனால் தினசரி அப்பகுதி மக்கள் பொருள் வாங்குவதற்காக நியாயவிலை கடைக்கு வந்து செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.

மேலும் ரேஷன் கடை பூட்டி இருப்பதை பார்த்து கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றார்கள். இந்நிலையில் அப்பகுதி மக்கள் இதுக்கு தீர்வு கிடைக்குமா என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |