உயர் நிர்வாக நீதிமன்றமாக கருதப்படும் மாநில கவுன்சிலின் தலைவராக 15 மாதங்கள் பணியாற்றியுள்ளார் 63 வயதான கத்ரினா சக்கெல்லரோபௌலோ. இவர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 300 வாக்குகளுக்கு 200 வாக்குகள் எடுத்துள்ளார் என ஸ்டெலியோஸ் பெட்சாஸ் என்னும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து மைய- இடது எதிர்கட்சிகள் இரண்டும் இவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
கிரேக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே மிக குறைவாக இருந்துள்ளது. தற்போதைய கிரேக்க அமைச்சரவையில் 18 முக்கிய பொறுப்புகளில் ஆண்கள் மட்டுமே உள்ளனர். 5 ஆண்டுகள் ஆட்சிக் காலமாக கருதப்படும் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், 69 வயதான பழமைவாத அரசியல்வாதியான தற்போதைய பிரதமர் ப்ரோக்கோபிஸ் பவ்லோபௌலோஸ்ஸை பின்னுக்குத் தள்ளி கத்ரினா சக்கெல்லரோபௌலோ ஆட்சியைப் பிடிப்பார்.