சரக டி.ஐ.ஜி. கயல்விழி அனைத்து காவல் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து வழக்குகள் குறித்து வருடாந்திர ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜ.ஜி கயல்விழி, மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், மன்னார்குடி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் டி.ஐ.ஜி. கயல்விழி மன்னார்குடி, நீடாமங்கலம், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம், வடுவூர், தேவங்குடி ஆகிய காவல் நிலையங்களில் ஒரு ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை குற்றப்பிரிவு உள்ளிட்ட வழக்குகளில் மேற்கொள்ளப்பட விசாரணைகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.