Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மொக்க கதையைக் கூட கேட்குமாறு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அறிவுறுத்திய பிரபல நடிகர்”… யார் தெரியுமா…???

விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷிடம் மொக்க கதையைக் கூட கேட்குமாறு டிப்ஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் விஜய்சேதுபதியும் ஐஸ்வர்யாவும் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள். அதனால் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது. இவர்கள் இருவரும் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, க/பெ ரணசிங்கம் என இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களுமே வெற்றியைப் பெற்று தந்தது. இவர்கள் இருவரும் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா தனது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இவர்கள் இருவரும் நீண்ட வருடங்களாகவே நண்பர்களாக இருந்து வருகின்றனர். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷிடம் மொக்கை கதையாக இருந்தாலும் கதையை கேட்குமாறு கூறியுள்ளார். எந்த ஒரு கதையையும் அலட்சியப்படுத்தாமல் கேட்கவேண்டும். மொக்க கதை கூட நமக்கு தேவையான விஷயங்களை கற்றுத் தரும். இரண்டரை மணி நேரம் கதை கேட்பது கடினம் தான். ஆனால் கதை கேட்பதை விட்டு விடாதே. ஒவ்வொரு கதையும் நமக்கு பொக்கிஷமான ஒன்று என விஜய் சேதுபதி கூறியதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Categories

Tech |