Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ”வெந்து தணிந்தது காடு”….. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை சிம்பு வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. தற்போது இவர் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு எனும் உணர்ச்சி நாயகன்...சுவாரஸ்ய தகவல்கள் | An emotional man named  Simbu ... Interesting information - Tamil Filmibeat

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்துவரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் சித்தி இத்நானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CcEp9klK_MD/

Categories

Tech |