புதுசேரியில் சிறை கைதிகளுக்கு செல்போன் விற்பனை: நான்கு சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக சிறை காவலர்களே கைதிகளிடம் செல்போன் விற்றது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சிறை காவலர்களான சபரி, சங்கர், சீனு, ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து , சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு சிறை கைதி நித்திஷ் சர்மா, செல்போன் மூலம் ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கைதிகளுக்கு செல்போன் விற்றதாக நான்கு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.