நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்ற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில் வில் ஸ்மித்ற்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த முடிவை ஆஸ்கார் அமைப்பாளர்கள் மோஷன் பிக்சர்ஸ்ஆர்டர்ஸ்& சயன்ஸ் அகடமி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பின் அங்கேயே கிறிஷ் ராக்கிடமும், ஆஸ்கர் அகாடமியிடமும் வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார். மேலும் அகாடமியில் இருந்து தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளார். ஆனால் சம்பவம் நடந்த அன்று இரவே கிங் ரிச்சர்ட் என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். அதோடு அன்றிரவு ஆஸ்கர் விருதில் கலந்து கொண்டு நடனமாடிக் கொண்டிருக்கிறார். இது சர்ச்சை ஆனவுடன் அகாடமி நாங்கள் சொத்தை விழா அரங்கை விட்டு வெளியேற சொன்னோம் ஆனால் அவர் செய்யவில்லை அறிவிப்பை மட்டும் வெளியிட்டது.
இதுபற்றி கிறிஸ் ராக் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையினரும் கேட்டு கேட்டும்கிறிஸ் ராக், வில் ஸ்மித் மீது எந்த புகாரும் தர மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் மார்ச் 20 அன்று பகலில் கூடிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி ஒழுங்கு நடவடிக்கை குழு தங்கள் முடிவை நேற்று அறிவித்துள்ளது. இதன்படி வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.அதோடு அந்த அசாதரணமான சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடித்த கிறிஸ் ராக்கிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளது ஆஸ்கர் அகாடமி.