Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போடி to மதுரை” அகல ரயில் பாதை….. 625 மீட்டர்….. பெரியமலை 2 ஆக பிளப்பு…!!

தேனி மாவட்டம் போடியில் இருந்து மதுரை செல்லும் வழிதடத்தில்  அகல ரயில்பாதைக்காக கடவாய் மலைப் பாறைகளை உடைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தேனி  மாவட்டம் போடியில் இருந்து மதுரை  செல்லும் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பொருட்டு 2011ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்,

மதுரை தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி, கணவாய் மலையில் சுமார் 625 மீட்டர் அகலத்திற்கு பாறைகளை உடைத்து அகலப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கொக்லைன்  எந்திரம் மூலம் அகலப்படுத்தும் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |