Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தான சேர்ந்த கூட்டம்” திரைப்பட பாணியில்….. வருமான வரித்துறை சோதனை…. ரூ1,00,000 பணம் 5சவரன் நகை கொள்ளை…!!

சென்னை அருகே தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட பாணியில் வருமானவரித்துறையினர் போன்று  நடித்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

 கடந்த மாதம் சென்னை  மாவட்டம் நெற்குன்றம் பகுதியையடுத்த பல்லவ நகரை சேர்ந்த நூருல்லா என்பவரது வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரது வீட்டில் சோதனையிட்டுள்ளனர்.

அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகையை பறித்துச் சென்ற கும்பல் நூருல்லாவை தாக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த காவல்துறை  அதிகாரிகள் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Categories

Tech |