Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் இனி…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!!!

புதிய ரேஷன் கார்டுகள் நேரடியாக வீடுகளுக்கு தபாலில் அனுப்பப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

சட்டசபையில் அவரது அறிவிப்புகள்

சிறப்பாக இயங்கும் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு மாநில அளவில் முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசாக 10 ஆயிரம், 3ம் பரிசாக 5,000 ரூபாயும் வழங்கப்படும். இதையடுத்து எடையாளர்களுக்கு 10 ஆயிரம், 6,000 மற்றும் 4,000 ரூபாய் வழங்கப்படும். அத்துடன் மாவட்ட அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாக 4,000 ரூபாயும், 2ம் பரிசாக 3,000 ரூபாயும், எடையாளர்களுக்கு 3,000 மற்றும் 2,000 ரூபாய் வழங்கப்படும். அதன்பின் புதிய ரேஷன் கார்டுகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்ப்பதற்கு நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ வீதம் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படும். சிவகங்கை, அரியலுார், வேலுார், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில், ௧2 கிடங்குகள் கட்டப்படும்.

நுகர்பொருள் வாணிபகழக கணக்குகளை முறைப்படுத்தி கண்காணிப்பதற்கு, புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு, கணிணிமயாக்கும் திட்டம், 50 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். திருவள்ளூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கான்கிரீட் தரை, மேற்கூரை அமைப்புடன்கூடிய 35 நெல் சேமிப்பு தளங்கள், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள 44 நெல் சேமிப்பு தளங்களுக்கு மேற்கூரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்பின் ரேஷன் பொருட்கள் கடத்தலை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் ஆந்திரா, கேரளா மாநில எல்லைகளிலுள்ள திருவள்ளூர், பொள்ளாச்சி, உத்தமபாளையம் போன்ற இடங்களில் 3 ரோந்து காவல்படைகள் உருவாக்கப்படும். ரேஷன் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகன நகர்வை கண்காணிப்பதற்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

Categories

Tech |