Categories
உலகசெய்திகள்

வானத்தில் தோன்றிய வினோத காட்சி… ரஷ்யா ஆயுதமோ…? அச்சத்தில் மக்கள்…!!!!!

அமெரிக்க வானில் தோன்றிய வினோத காட்சியால் மக்களிடையே  அச்சம் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் வானிலிருந்து பெரிய ஏவுகணை ஒன்று பூமியை நோக்கி விழுவதைப் போல தோன்றிய அந்த காட்சியை மக்கள் விமானம் ஒன்று எரிந்து வருகிறதா அல்லது உக்ரைன் போர் தொடர்பிலான ஒரு ரகசிய ஆயுதமா என்றெல்லாம் எண்ணி பயந்துள்ளனர். வேறு சிலரோ வழக்கமான அமெரிக்கர்களை போல அது ஒரு பறக்கும் தட்டு அல்லது விண்கல் அல்லது சாட்டிலைட் என்று பூமியில் விழுகிறது என எண்ணி இருக்கின்றனர்.

நேற்று காலை 7 மணியளவில் அலாஸ்காவில் உள்ள lazy mountain பகுதியில் இந்த காட்சி தோன்றியிருக்கிறது. இந்த விஷயம் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அது என்ன என்பதை அறிவதற்காக போலீசார் விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். பின்னர் விமானம் எதுவும் மாயமாகவில்லை, விபத்து எதுவும் நிகழவில்லை என அவர்கள் தெரிந்து கொண்டனர்.

அத்துடன் இன்று காலை மீட்பு குழுவினரை ஹெலிகாப்டர் ஒன்றும் அந்த பகுதிக்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டதில் அந்த விமான விபத்து எதுவும் நிகழ்ந்ததற்கான அடையாளம் காணப்படவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். கடைசியாக அது ஜெட் விமானம் என்று சொன்றதால் உருவான புகையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Categories

Tech |