Categories
மாநில செய்திகள்

இதுலாம் நியாயமா?…. 24 மணி நேர மது பார்…. போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே சுமார் 6 நூற்பாலைகள் அட்டை மில் முக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலைகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இங்கு பிரதான சாலையோரம் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை ஒன்று மக்களின் எதிர்ப்பால் சுமார் 100 மீட்டருக்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஆலைகளுக்கு மத்தியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்கு, இடத்தின் உரிமையாளர்கள் ஆலை கிட்டங்கி கட்டுவதாக பதிலளித்துள்ளனர். இந்நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் தனியார் மதுக்கூடம் குளிர்சாதன வசதியுடன் அந்த இடத்தில் திறக்கப்பட உள்ளதாக இன்று காலை பொதுமக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே மது அருந்துவதற்காக தொழிலாளர்கள் தங்களுடைய ஊதியத்தில் பெரும் பகுதியை செலவு செய்வதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அடிக்கடி குடிபோதையில் அப்பகுதியில் விபத்துகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அந்த இடத்தில் கூடுதலாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மதுக்கூடம் திறக்கப்பட்டால் தங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என்று குற்றம்சாட்டி சட்டி கிணறு, ஜெஜெ காலனி, புதூர், அட்டை மில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு இடம் மாற்ற கோரியும், புதிய மது கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இந்த போராட்டத்தில் முழக்கமிட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் கோரிக்கை குறித்து தெரியப்படுத்தி, விரைவில் தனியார் மதுக்கூடம் இடமாற்றம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |