Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள்  நீண்ட நேரம் நிற்பதால் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. இதனை குறைக்கும் வகையில் நமது தமிழக அரசு கடைகள் மற்றும் நிறுவன திருத்த சட்டத்தில்  பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்துதல் தொடர்பான சட்ட திருத்தம் செய்துள்ளது.

எனவே நமது மாவட்டத்தில் உள்ள கடை மற்றும் தொழில் நிறுவனங்கள் பணிபுரியும்  ஊழியர்களுக்கு தகுந்த இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும். மேலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ள பதிவேடு, சம்பள பதிவேடு ஆகிய திருத்த சட்டத்தையும்  பின்பற்ற வேண்டும். இதனையடுத்து பணியாளர்களுக்கு சரியான இருக்கை வசதி அமைக்காத கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட  ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த கூறியுள்ளார்.

Categories

Tech |