நம்பிக்கையற்ற தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான் கானை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று கொண்டுவந்தனர். அதனையடுத்து இம்ரான்கான் பரிந்துரைத்ததால் அதிபர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
இது, அந்நாட்டு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே இது தொடர்பில் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தாமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதன்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் நம்பிக்கையற்ற தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அதன்படி, இன்று நம்பிக்கையற்ற தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்காக பாராளுமன்றத்தை கூட்டியுள்ளனர். எனினும் வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் தாமதிப்பதாக எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.
இன்று இரவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நம்பிக்கையற்ற தீர்மானத்திற்காக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுவை அரசு தாக்கல் செய்திருக்கிறது.