Categories
அரசியல் மாநில செய்திகள்

“வடமாநிலத்தில் ஆதரவு” சாதி பார்த்து பண்ணுங்க….. தமிழக அரசிடம் ராமதாஸ் கோரிக்கை…!!

2021 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக  நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாட்டாளி மக்கள்  கட்சியின் தலைவர் ராமதாஸ்  தமிழக அரசிடம் கோரிக்கை கடிதம்   ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக  அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்  உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாநிலங்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டிய ராமதாஸ் இட ஒதுக்கீட்டில்  மத்திய அரசு கொண்டு வரும் நிலைப்பாட்டிற்கு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் அவசியம் என்றும் கூறியுள்ளார். மேலும் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |