Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தல்”… இளைஞர் கைது…!!!

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு பஸ்ஸில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம் போலீஸ் நிலையத்துக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேர்  வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் படி குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன், ஏட்டுகள் லட்சுமி, மஞ்சுநாத் ஆகியோர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்

பொழுது ஆந்திராவில் இருந்து வந்து கொண்டிருந்த பஸ்சை நிறுத்தி சோதனையிட்ட போது ஒருவரின் பையிலிருந்து 300 கிராம் கஞ்சா பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரித்தபோது அவர் சேதுக்கரை ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. இவர் குடியாத்தம் நகரில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது போலீசுக்குத் தெரிய அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |