சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த அக்பர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதைப்போல் எடச்சித்தூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிமாறன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.