Categories
தேசிய செய்திகள்

2 பால் பாக்கெட்டுக்களால்….. 2 காவலர்கள் பணியிட மாற்றம்…. நொய்டாவில் சிரிப்பூட்டும் சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 2 பால் பாக்கெட்டுகளை காவல்துறையினர்   திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளும்  பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில்  உள்ள கடை ஒன்றில் வெளியே கடந்த 19ம் தேதி இரவு கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட்டுகள் ட்ரேவில்  அடுக்கி கடை வெளியில் வைக்கப்பட்டது. அப்போது ரோந்து வாகனத்தில் அங்கு வந்த இரண்டு காவல்துறை  அதிகாரிகளில் ஒருவர் மட்டும் கீழே இறங்கி வந்து,

இரண்டு பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்று வாகனத்தில் இருந்த இன்னொரு காவல்துறை  அதிகாரியிடம் கொடுத்தார். பின்னர் 2 பேரும் வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வைரலானதை தொடர்ந்து இரண்டு காவல்துறை அதிகாரிகளும்  பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Categories

Tech |