Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட நிலப்பிரச்சினை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழையூர் கிராமத்தை பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு நீண்டகாலமாக நிலத்தில் செல்லும் பாதையில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் தகராறு ஏற்பட்டு காவல் நிலையத்தில் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பழனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |